அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங். வலியுறுத்தல்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய் பங்கேற்றனர்.;

Update:2024-11-24 13:15 IST

அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

கூட்டத்தொடரில் இடம்பெறும் விவாதங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக, அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. மணிப்பூர் பிரச்சினை, வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரெயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகாய், திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (25.11.2024) தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வக்ப் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்