மராட்டியத்தில் ரோடு ரோலர் அடியில் சிக்கி தொழிலாளி உடல் நசுங்கி பலி

ரோட் ரோலர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-01-08 12:50 IST

தானே,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் ஒரு கட்டுமான தளத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் முன்பு நேற்று மதிய உணவுக்கு பிறகு தொழிலாளி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, ரோடு ரோலர் டிரைவர் எந்த சோதனையும் செய்யாமல் வாகனத்தை இயக்கியதால், முன்னால் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி மீது ஏறியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக ஊழியரின் புகாரின் அடிப்படையில், ரோடு ரோலர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகார் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்