தேர்தல் முடிவுகள்: அரியானாவில் பா.ஜ.க. முன்னிலை, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

Update: 2024-10-08 02:37 GMT


Live Updates
2024-10-08 05:35 GMT

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ராஜாஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில், இறுதி வெற்றி காங்கிரஸ்க்குதான். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இது சித்தாந்தத்தின் போராட்டம் என்றார்.

2024-10-08 05:20 GMT

அரியானா சட்டசபை தேர்தலில் கைத்தல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லீலா ராம் என்பவரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா சுர்ஜேவாலா 2 ஆயிரத்து 623 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இந்த விவரம் வெளிவந்து உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

2024-10-08 05:12 GMT

அரியானா தேர்தல் முடிவுகள் (முன்னிலை)

பா.ஜ.க. 47
காங்கிரஸ் 35
இந்திய தேசிய லோக் தளம் 1
பகுஜன் சமாஜ் கட்சி 1
சுயேட்சைகள் 5
2024-10-08 05:11 GMT

அரியானா முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் வேட்பாளுருமான பூபிந்தர் சிங் ஹுடா கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

2024-10-08 05:06 GMT

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் (முன்னிலை)

தேசிய மாநாட்டு கட்சி 39
பா.ஜ.க. 28
காங்கிரஸ் 8
மக்கள் ஜனநாயக கட்சி 4
ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1
ஆம் ஆத்மி கட்சி 1
சுயேட்சைகள் 7
2024-10-08 04:54 GMT

ஜம்மு காஷ்மீர் பிஷ்னா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் நீரஜ் குந்தன் கூறுகையில்,

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மக்கள் எங்களுக்கு ஆசி வழங்குவார்கள் என்றார்.

2024-10-08 04:53 GMT

அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 மணிக்கு பிறகு திருப்பம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

2024-10-08 04:42 GMT

பா.ஜ.க. முன்னிலை

அரியானாவில் பா.ஜ.க. 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி தலா ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளன.

2024-10-08 04:28 GMT

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் (பட்காம், கந்தர்பால்) முன்னிலையில் உள்ளார்.

2024-10-08 04:23 GMT

அரியானா மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்