பிரபாஸ் திருமணத்தில் ஆர்வம் காட்டாதது ஏன்? - மனம் திறந்த அம்மா

இந்திய சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.;

Update: 2025-01-04 03:42 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவருக்கு பான் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன.

இந்திய சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல்  இருக்கிறார். இந்நிலையில், பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து அவரது அம்மா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

"பிரபாஸிற்கு ரவி என்கிற ஒரு நெருங்கிய நண்பன் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசப்பானதாக அமைந்துவிட்டது. பிரபாஸை அது மிகவும் பாதித்தது. இதனால் திருமணத்தில் பிரபாஸ் அவ்வளவு ஆர்வம் காட்டுவது இல்லை. இருந்தாலும் ஒரு நாள் அவர் மனம் மாறுவார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்