"பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்க வேண்டும்"- சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.;

Update:2025-01-06 12:17 IST

திருச்செந்தூர்,

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கெ.25 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

'எப்போது இங்கு வந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அமரன் வெற்றிக்கு நன்றி சொல்ல வேண்டியது இருந்தது அது மட்டுமில்லாமல் இன்னும் பல வேண்டுதல்கள் இருந்தன. அதையெல்லாம் முடித்துவிட்டேன், மன நிறைவாக இருக்கிறது' என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கையில், 'அதை பற்றி இங்கு பேச வேண்டாம். சாமியை வணங்க வந்திருக்கிறேன், வேறு எங்காவது பேசலாம். ஆனால், இதுபோன்ற விஷயங்கள் நடக்க கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நாம் அனைவரும் நிற்க வேண்டும். இனியும் இது போன்ற சம்பவம் நடக்காது என்று நம்புவோம். கடவுளிடமும் அதையே நானும் வேண்டிக்கொள்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்