'எங்கள் யுனிவெர்ஸின் 'தானோஸ்' அவர்' - தயாரிப்பாளர் தினேஷ் விஜன்
ஸ்ட்ரீ 2 படத்தில் அக்சய் குமார் கேமியோ ரோலில் நடித்திருந்தார்;
சென்னை,
பிரபல தயாரிப்பாளர் தினேஷ் விஜன் தனது மடாக் பிலிம்ஸின் கீழ் காமெடி ஹாரர் யுனிவெர்ஸை உருவாக்கி பல படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி, இவர் தயாரித்த ஸ்ட்ரீ 2 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இதில் ஷ்ரத்தா கபூர், ராஜ் குமார் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்சய் குமார் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய தினேஷ் விஜன், ஸ்ட்ரீ 3 படத்தில் அக்சய் குமார் கண்டிப்பாக இருப்பார் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஸ்ட்ரீ 3-ல் கண்டிப்பாக அக்சய் குமார் இருப்பார். அவர் மடாக் பிலிம்ஸ் யுனிவெர்ஸின் 'தானோஸ்' 'என்றார்.
'ஸ்ட்ரீ 3' படம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.