'டூன் பார்ட் 2' படப்பிடிப்பில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட ஜெண்டயா
டூன் பார்ட் 2 படப்பிடிப்பின்போது தனக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக ஜெண்டயா கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
ஜெண்டயா பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் பாடகர் ஆவார். சிறுவயதிலேயே திரையுலகில் ஆர்வம் கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்த இவர், ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கொடுத்தது.
ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம், டூன் பார்ட் 1, டூன் பார்ட் 2 என பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், டூன் பார்ட் 2 படப்பிடிப்பின்போது தனக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'டூன் பார்ட் 2 படப்பிடிப்பு மிகவும் வெப்பமான இடத்தில் நடைபெற்றது. அப்போது அதிக தண்ணீர் தாகம் ஏற்படும். இருந்தபோதும் நான் தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை. ஏனென்றால், தண்ணீர் அதிகமாக குடித்தால் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியது வரும். இதில் என்ன பிரச்சினை என்றால், எங்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து கழிவறை செல்லவேண்டும் என்றால் சுமார் 10 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். இதனாலேயே நான் அதிகமாக தண்ணீர் குடிக்கவில்லை. இதனால் எனக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டது'என்றார்.