"சூர்யா 46" படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அளித்த அப்டேட்

சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார்.;

Update:2025-03-25 20:42 IST
"சூர்யா 46" படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் அளித்த அப்டேட்

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

சூர்யாவின் 46 படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இது இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் '760 சிசி' என படத்தலைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் நாக வம்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சூர்யா – வெங்கி அட்லூரி படத்தை தயாரிப்பதை உறுதி செய்திருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது, "சூர்யா சாருடன் படம் பண்ண நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். தெலுங்கு மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் சூர்யா சாரை நாங்கள் காட்டுவோம். இது எங்களுக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்