"ராபின்ஹுட்" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள ‘ராபின்ஹுட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.;

ஐதராபாத்,
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'.நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டேவிட் வார்னர் கலந்து கொண்டார். ராபின்ஹுட் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டருடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.