நடிகை சமந்தாவிற்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?

நடிகை சமந்தா, ராஜ் நிடிமோர் இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update:2025-03-25 20:13 IST
நடிகை சமந்தாவிற்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதற்கிடையில், சமந்தா நடிப்பில் சமீபத்தில் 'சிட்டால் ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸ் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த வெப் சீரிஸை ராஜ் நிடிமோர் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இயக்குனர் ராஜ் நிடிமோர் சமந்தாவுடன் கைகோர்த்து வந்தார். கை கோர்த்தபடி இருப்பதை பார்த்த ரசிகர்களோ இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர், நடிகை சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இந்த நிலையில், நடிகை சமந்தா கையில் வைர மோதிரத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோதிரத்தை பார்த்த ரசிகர்கள், சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று கூறுகிறார்கள். இது உண்மையை இல்லை வதந்தியா என்பது உறுதியாக வேண்டுமெனில் சமந்தா அல்லது ராஜ் நிடிமோரு விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இதுவரை அவர்களிடம் இருந்து எந்த விதமான பதில்களும் வரவில்லை. 

 

Tags:    

மேலும் செய்திகள்