பாலிவுட் சினிமாவுக்கு அருமையான ஆண்டாக இது இருக்கும் - ஸ்ட்ரீ 2 பட தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் தினேஷ் விஜன் தனது மோடாக் பிளிம்ஸின் கீழ் காமெடி ஹாரர் யுனிவெர்ஸை உருவாக்கி பல படங்களை தயாரித்து வருகிறார்.;
சென்னை,
பிரபல தயாரிப்பாளர் தினேஷ் விஜன் தனது மோடாக் பிலிம்ஸின் கீழ் காமெடி ஹாரர் யுனிவெர்ஸை உருவாக்கி பல படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி, இந்த ஆண்டு வெளியான ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா நடிக்கும் தாமா படத்தை தயாரிக்கிறார்.
மேலும், சக்தி ஷாலினி, சாமுண்டா, பேடியா 2, பேக்லா மஹாயுத் மற்றும் தூசாரா மஹாயுத் ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த ஆண்டு பாலிவுட் சினிமாவுக்கு அருமையாக இருக்கும் என்று தினேஷ் விஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நம் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகள் நிகழும், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும். இந்த ஆண்டு பாலிவுட் சினிமாவுக்கு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். அதற்கு மோடாக் பிளிம்ஸ் மட்டும் நன்றாக செயல்பட்டால் போதாது' என்றார்.
இந்த ஆண்டு மோடாக் பிளிம்ஸ் தயாரிக்கும் தாமா மற்றும் சக்தி ஷாலினி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும், வருண் தவான் நடிக்கும் பேடியா 2 அடுத்தாண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியும் சாமுண்டா டிசம்பர் 4-ம் தேதியும் வெளியாக உள்ளது.