'ஸ்பைடர் மேன்' நட்சத்திரங்கள் ரகசிய நிச்சயதார்த்தம்?

டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது!;

Update:2025-01-07 07:33 IST

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் பாடகராக இருப்பவர் ஜெண்டயா. சிறுவயதிலையே திரையுலகில் ஆர்வம் கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றி வந்த இவர், டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து டாம் ஹாலண்டுடன், ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல், டூன் பார்ட் 1, டூன் பார்ட் 2 என பல ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். முன்பிருந்தே டாம் ஹாலண்டும், ஜெண்டயாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும்நிலையில் தற்போது இரு நட்சத்திரங்களுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிபோர்னியாவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் ஜெண்டயா வைர மோதிரத்துடன் கலந்துகொண்டது இதற்கு மேலும் மெருகேற்றி உள்ளது. இதனால், அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்