'இந்தப் படத்தின் தொடர்ச்சியை எடுக்கவே கூடாது'- பாலிவுட் நடிகை பதிவு

'பாக் மில்கா பாக்,' 'டெல்லி 6', 'வீர் ஜாரா,' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றவர் திவ்யா தத்தா.;

Update:2024-11-12 17:30 IST

மும்பை,

பாலிவுட் நடிகைகளில் ஒருவர் திவ்யா தத்தா. பஞ்சாபைச் சேர்ந்த இவர் ஏராளமான பஞ்சாபி படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 'பாக் மில்கா பாக்,' 'டெல்லி-6', 'வீர் ஜாரா,' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இதில், வீர் ஜாரா வெளியாகி இன்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகிறது. இதனை நினைவுக்கூரும் விதமாக நடிகை திவ்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'வீர் ஜாரா வீர் ஜாராவாக மட்டுமே இருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்தப் படத்தின் தொடர்ச்சியை எடுக்கவே கூடாது என்று நினைக்கிறேன். இது தனித்துவமாக இருக்க வேண்டும். யாஷ் சோப்ரா இயக்கிய மற்றும் ஆதித்யா சோப்ரா எழுதிய வீர் ஜாராவை நினைவில் கொள்கிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திவ்யா தத்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சர்மாஜி கி பேட்டி'. இப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஸ்மான் குரானாவின் மனைவி தாகிரா காஷ்யப் இயக்கி இருந்தார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படமாகும். இப்படத்தை தொடர்ந்து திவ்யா தத்தா, 'சாவா' படத்தில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்