30 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் 'எங்கு ஊரு பாட்டுக்காரன்' பட நடிகை

'செண்பகமே... செண்பகமே...', 'மதுர மரிக்கொழுந்து வாசம்...' போன்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன.

Update: 2024-07-07 04:01 GMT

சென்னை,

1987-ம் ஆண்டு ராமராஜன் நடித்த 'எங்கு ஊரு பாட்டுக்காரன்' படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாந்திபிரியா. அந்த படத்தில் இடம்பெற்ற 'செண்பகமே... செண்பகமே...', 'மதுர மரிக்கொழுந்து வாசம்...' போன்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து, இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. 

அதன்பின், 1992-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 1994-ம் ஆண்டுக்கு பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

54 வயதாகும் சாந்திபிரியா, தற்போது இளம் நடிகைகளுக்கே 'டப்' கொடுக்கும் வகையில் விதவிதமான போட்டோசூட் நடத்தி கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கதைகள் கேட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்