'கோட்' படத்தின் வசூல்: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

'கோட்' படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.;

Update:2024-09-18 17:58 IST

சென்னை,

லியோவுக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த நிலையில் 'கோட்' திரைப்படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 413கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்