'மெர்சல்' முதல் 'மகாராஜா' வரை - சீனாவில் வெளியான தமிழ் படங்கள்
கடந்த மாதம் சீனாவில் வெளியான படம் மகாராஜா.
சென்னை,
தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பல படங்கள் சீனாவில் வெளியாகி வசூல் வேட்டை செய்து வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் வெளியான மகாராஜா படம் சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் வெளியான தமிழ் படங்களை தற்போது காண்போம்.
'மெர்சல்'
'தெறி' படத்தைத்தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'மெர்சல்'. விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பையடுத்து, 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் வெளியானது.
'2.0'
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் 2.0. மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இப்படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி சீனாவில் 48,000 திரைகளில் வெளியானது.
'கனா'
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான படம் கனா. சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் 10, 000 திரைகளில் சீனாவில் வெளியானது.
'மகாராஜா'
நித்திலன் சாமிநாதன் இயக்கத்ஹ்டில் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவானது மகாராஜா. விஜய் சேதுபதியில் சினிமா கெரியரில் சிறந்த படமாக மமைந்த இப்படம் கடந்த மாதம் 29-ம் தேதி சீனாவில் வெளியானது. சீனாவில் சுமார் ரூ. 26 கோடி வசூலித்து இதற்கு முன்பு சீனாவில் அதிக வசூல் செய்த படமாக இருந்த ரஜினியின் 2.0-வை முந்தி சாதனை படைத்துள்ளது.