'விடுதலை 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Update: 2024-12-21 16:13 GMT

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது.

இப்படத்தின், 'தினம் தினமும்' என்ற முதல் பாடல் வெளியாகி வைரலானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் 'விடுதலை 2' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்