"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பாலாவின் இயக்கத்தில் "வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
"வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது 'இறை நூறு' என்ற லிரிக் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை கார்த்திக் நேத்தா வரிகளில் மது பாலகிருஷ்ணன் பாடியுள்ளார். இப்பாடலில் அருண் விஜய்-க்கும் அவரின் தங்கைக்கும் உள்ள அன்பை பிரதிபளிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளது.