இ.எம்.ஐ. கூட கட்ட முடியாமல் கார் பறிபோனது... ஷாருக் கானை பற்றி பகிர்ந்த பிரபல நடிகை

ஷாருக்கான் குறித்த சில தகவல்களை நடிகை ஜுஹி சாவ்லா பகிர்ந்துள்ளார்.;

Update:2024-07-29 07:27 IST

புனே,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களாக பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக் கான், நடிகை ஜுஹி சாவ்லா உள்ளிட்டோர் உள்ளனர். இது மட்டுமல்லாமல் 90களில் இருவரும் இணைந்து பல படங்களில்  நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஷாருக்கான் குறித்த சில தகவல்களை நடிகை ஜுஹி சாவ்லா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

'அவர் சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் அவருக்கு மும்பையில் வீடு கிடையாது. அதனால் அவரது சொந்த ஊரான டெல்லியில் இருந்துதான் வருவார். இங்கு வந்து அவர் எங்கே தங்கினார் என்று தெரியவில்லை. அவர் படக்குழுவினருடன் தேநீர் அருந்தி, அவர்களுடன்தான் சாப்பிடுவார். அவர்களுடன் எந்த தடையுமின்றி பழகுவார்.

அவரும் அப்போது 2-3 ஷிப்ட் வேலை செய்தார். அவர் என்னுடன் ராஜு பன் கயா ஜென்டில்மேன் (1992)உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஒரு கருப்பு ஜிப்சி இருந்தது. ஆனால் இ.எம்.ஐ. கட்டவில்லை என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினாலோ அந்த கார் எடுத்துச் செல்லப்பட்டது.

இதனால் அவர் மிகவும் மனமுடைந்து செட்டுக்கு வந்தார். நான் அவரிடம், 'கவலைப்படாதீர்கள், ஒரு நாள் இன்னும் பல கார்கள் உங்களிடம் இருக்கும் என்று சொன்னேன். அவர் அதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். தற்போது அவரை பாருங்கள்' என்றார்.

ஷாருக் தற்போது பல சொகுசு கார்களையும் மும்பையில் பங்களாவையும் வைத்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்