சூரியின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது
சூரியின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி', 'விடுதலை பாகம் 2' ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து, இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், சூரியின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். மேலும், ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.