'காதலே காதலே' படத்தின் பாடல் அப்டேட்
‘காதலே காதலே’ படத்தின் ‘ஆசை’ பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத். இவர் 'மங்காத்தா, ஜில்லா, சென்னை 600028 - 2, மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'காதலே காதலே' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பொழுது போக்கு அம்சத்துடன் இக்காலத்து இளைஞர்களின் காதலையும் அவர்கள் ஒரு உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை குறித்த படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை பிரேம் நாத் எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ வாரி பிலிம் தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல் உரிமையை சரிகமா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசை பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆசை பாடலின் வீடியோ நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை வியன் புகழேந்தி வரிகளில் விஷால் சந்திரசேகர் பாடியுள்ளார் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.