'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு! - இயக்குநர் லோகேஷின் நெகிழ்ச்சி பதிவு
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.;
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியானது.
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தின் கதை கொரிய மொழியில் வெளியான 'சைலன்ஸ்டு' திரைப்படத்தின் கதையை ஒட்டி உருவானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், 'மாஸ்டர் என் மனதிற்கு நெருக்கமான படம். நன்றி விஜய் அண்ணா. இந்தப் படத்தை மறக்கமுடியாத படமாக்கிய அனைவருக்கும் நன்றி. இந்த மறக்க முடியாத பயணத்திற்கு நன்றி 'என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.