'என்னுடைய வெற்றி திரையுலகின் வெற்றி" - நடிகர் பாலகிருஷ்ணா
பாலகிருஷ்ணா நடித்துள்ள 'டாகு மகாராஜ்' படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.;
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார்.
'டாகு மகாராஜ்' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கி உள்ளார். பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் விழா ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், "என்னுடைய வெற்றி உங்கள் வெற்றி. என்னுடைய வெற்றி திரையுலகின் வெற்றி" என்று கூறினார்.