'நாகபந்தம்': விராட் கர்ணாவின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்ட ராணா
' டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா , தற்போது ’நாகபந்தம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.;
சென்னை,
கடந்த ஆண்டு நந்தமுரி கல்யாண் ராம், சம்யுதா மேனன், அம்மு அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான டெவில் படத்தை இயக்கிய அபிஷேக் நாமா , தற்போது 'நாகபந்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விராட் கர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை என்ஐகே ஸ்டுடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் ஆகியவற்றின் கீழ் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கிறார். அபே இசையமைக்கும் இப்படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளநிலையில், விராட் கர்ணாவின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். விராட் கர்ணா கடலில் முதலையுடன் சண்டையிடுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.