'விடுதலை 2' வெற்றி - நடிகர் சூரி நெகிழ்ச்சி

நடிகர் சூரி விடுதலை 2 படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-01-13 14:29 IST

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் இதுவரை ரூ. 60 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி விடுதலை 2 படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ,

"விடுதலை திரைப்படத்தின் 2 பாகங்களும் என்னுடைய திரை வாழ்க்கையையே மாற்றும் படங்களாக அமைந்தன. குமரேசன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பானது. இதனை சாத்தியமாக்கிய இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்