அஜித்குமாருக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து
நடிகை சிம்ரன் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
துபாயில் நடந்த 24எச் கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்று வெற்றி பெற்றது.
இதையடுத்து திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் அஜித் குமாருக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிம்ரன் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'இந்த மிகப்பெரிய வெற்றிக்காக அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள். உண்மையிலேயே இது ஊக்கமளிக்கிறது'இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.