'ராபின்ஹுட்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் டேவிட் வார்னர்
ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள 'ராபின்ஹுட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.;

ஐதராபாத்,
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. அதிலும் குறிப்பாக 'அதிதா சர்ப்ரைஸ்' பாடல் என்ற நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடி இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இப்படத்தில் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.