மூகாம்பிகை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-03-24 16:21 IST
மூகாம்பிகை கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார். இதையொட்டி திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூரில் தாய் மூகாம்பிகை கோவில் உள்ளது. சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள்.

இசைஞானி இளையராஜா, தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் ஆவார். இந் நிலையில் இன்று கொல்லூர் இளையராஜா மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகளை அவர் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்