பொங்கல் பண்டிகையில் வெளியாகும் 'ஜன நாயகன்'

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'ஜன நாயகன்' படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.;

Update:2025-03-24 18:09 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது, அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது, ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்