கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு இன்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.;

Update:2025-03-24 19:08 IST
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

மதுரை,

மதுரை அருகே உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 9 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் ரூ.17.80 கோடியில் கீழடியில் அகழாய்வு நடந்த இடத்திலேயே 5 ஆயிரத்து 914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்