பிரணவ் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் பிரணவ் மோகன்லால் - இயக்குனர் ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.;

மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும், பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர். பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள விவசாய பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். சில சமயங்களில் குதிரை, ஆடு போன்றவற்றையும் கவனித்துக் கொள்கிறார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரணவ் மோகன்லால், 2015-ல் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவரது நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஹிருதயம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'வர்ஷங்களுக்கு சேஷம்' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது, இக்கூட்டணியின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். நைட் ஷிப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதுவும் ஹாரர் படமாகவே உருவாகிறது.
கடந்த வருடம் பிப்ரவரியில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் 'பிரம்மயுகம்' என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸ் அனைத்தும் சிறப்பு. 'பிரம்மயுகம்' திரைப்படம் மோனோகுரோம் வடிவத்தில் கிளாஸ்ட்ரோபோபிக் அனுபவத்தைக் கொடுக்கிறது. உலகளவில் ரூ.80 கோடி வரை இப்படம் வசூலித்தது. குறிப்பிடத்தக்கது