அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜய் தேவ்கன் நடித்துள்ள 'ரெய்டு 2' படத்தில் கதாநாயகியாக வாணி கபூர் நடித்துள்ளார்.;

Update:2025-03-24 17:03 IST
அஜய் தேவ்கனின் ரெய்டு 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மும்பை,

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் வில்லனாக நடிக்கிறார்.

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில்உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் முன்னதாக பிப்ரவர மாதம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ரெய்டு 2 வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'ரெய்டு 2' படத்தை தொடர்ந்து, சன் ஆப் சர்தார் 2 படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்