திருமண கொண்டாட்டத்தில் நடிகை சோபிதா துலிபாலா
நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
ஐதராபாத்,
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சோபிதா துலிபாலா. இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இவர்களது திருமணம் வருகிற 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணம் ஐதராபாத்தில் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் 8 மணிநேரம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், நேற்று சோபிதா துலிபாலா வீட்டில் திருமணத்திற்கு முன் நடைபெறும் மஞ்சள் பூசும் (ஹல்தி) நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது எடுத்த கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சோபிதா. பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சடங்கு நிகழ்ச்சியில் நலங்கு வைத்து மஞ்சள் தேய்த்து சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.