.இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சூரியின் புகைப்படங்கள்
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் சூரியின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
லாஸ் வேகஸ்,
நடிகர் சூரி, கடந்த 2009-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தது இவர் குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு ராஜா என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு கூலிங் கிளாஸ் போட்டப்படி கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து நகரின் அழகை ரசிக்கும் படி உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'லாஸ் வேகஸ்க்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் , இவரது நடிப்பில் அடுத்தப்படியாக 'கொட்டுக்காளி' மற்றும் 'விடுதலை 2' ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.