நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள்

நாளை (செப்டம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்த ஒரு பார்வை.;

Update: 2024-09-19 10:50 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1. லப்பர் பந்து : ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'சர்தார், ரன் பேபி ரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

2. கடைசி உலகப் போர் : போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படம் 'கடைசி உலகப் போர்'. இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

3. கோழிப்பண்ணை செல்லதுரை : கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் ஆகும்.

4. நந்தன் : இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'நந்தன்'. இந்த படத்தை 'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

5. தோழர் சேகுவேரா : சத்யராஜ் நடிப்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தோழர் சேகுவேரா'. இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

6. தோனிமா : விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'தோனிமா'. இப்படத்தில் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றும் இப்படத்தில் நடித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்