சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.