ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-12-09 12:11 GMT

டெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னராக செயல்பட்டு வருபவர் சக்திகாந்த தாஸ். இவரது பதவி காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை மறுதினம் (டிசம்பர் 11) பதவியேற்க உள்ளார். இவர் 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்