மழை நின்றவுடன் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழுப்புரத்தில் ஆய்வுக்கு பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. மழை நின்றவுடன் கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றார்.