கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-11-28 13:28 GMT

புதுவை,

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது காரைக்கால் - மகாபலிபுரம் இடையே 30-ந்தேதி கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலுக்கு அடுத்த இரண்டு தினங்கள் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  

அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்