இந்துக்கள் குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - கோபால்ஜி பேச்சு

பெண்கள் இந்து தர்மத்தை காக்க இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று ஆர்.ஆர்.கோபால்ஜி கூறினார்.;

Update:2025-01-06 05:28 IST

சேலம்,

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட மாநாடு சேலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் நாயன்மார்கள் வாழ்ந்த பூமி. இங்கு பிறந்ததற்கு புண்ணியம் செய்து இருக்கிறோம். இந்துக்களில் பல்வேறு பிரிவுகள், கடவுள் கும்பிடுவதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பஸ் கொடுத்துவிட்டால் போதுமா? ரூ.1,000-த்தில் குடும்பம் நடத்த முடியுமா? ஆண்கள் டாஸ்மாக் கடையில் மாதம் ரூ.10 ஆயிரம் செலவு செய்கின்றனர். டாஸ்மாக் கடை இல்லை என்றால் அந்த 10 ஆயிரம் பணம் மூலம் குழந்தைகளை படிக்க வைக்கமுடியும். உரிமை, வாழ்வாதாரங்கள் காக்க டாஸ்மாக் கடையை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும்.

இந்தியாவை இந்துக்கள் ஆட்சி செய்யவேண்டும் என்றால் இந்துக்கள் அதிகம் இருக்க வேண்டும். எனவே குறைந்தது 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் இதேமக்கள் தொகை நீடிக்கும். பெண்கள் இந்து தர்மத்தை காக்க இந்து விரோத ஆட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்