11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வருகிற 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.;
சென்னை,
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் (11.1.2025) சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது