மும்பை,
மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது.
இந்த சூழலில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என்று பா.ஜனதா அறிவித்திருந்தது. இந்நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக இன்று (புதன்கிழமை) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது
அதில் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி மராட்டிய மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க உள்ளார்.