முயற்சியால் வெற்றியும், பொருளாதார மேன்மையும் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலில், உற்சாகம் காணப்படும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் பணத் தேவை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காகவும், சுபநிகழ்ச்சிகளுக்காகவும் செலவு செய்வீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள்.