கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை - சென்னை ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையின் படி மாணவி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரதேச பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.