2023 ஜனவரி 1-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.