சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் 500 பேர் அந்நாட்டு துறைமுகத்திற்கு வந்துள்ளனர். சூடான் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை கப்பலில் 500 பேரை சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளதாகவும் சவுதி அரேபியாவிலிருந்து விமானப்படை விமானத்தில் முதற்கட்டமாக 500 பேர் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.