கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

இந்த தொடரின் முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

Update: 2024-07-01 01:36 GMT

லண்டன்,

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. புல்தரையில் நடக்கும் இந்த போட்டியில் இந்தமுறை ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), 7 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3-ம்நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெண்கள் பிரிவில், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்ற நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காப் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), ரைபகினா (கஜகஸ்தான்), நவோமி ஒசாகா (ஜப்பான்) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வரிந்து கட்டுகிறார்கள்.

முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்