மியாமி ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-03-25 20:07 IST
மியாமி ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் - பிரிட்டனின் ஜேமி முர்ரே இணையை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் - பிரிட்டனின் ஜேமி முர்ரே இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஜோடி பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல் - ஜூலியன் கேஷ் இணையை எதிர்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்