மியாமி ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-03-26 18:49 IST
மியாமி ஓபன் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று (ரவுண்ட் ஆப் 16) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன் உடன் மோதினார்.

இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த டெய்லர் பிரிட்ஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஆடல் வால்டனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் மோத உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்