மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

சபலென்கா 4-வது சுற்றில் டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.;

Update:2025-03-25 01:15 IST
மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

image courtesy:twitter/@MiamiOpen

மியாமி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் 4 வது சுற்று (காலிறுதிக்கு முந்தைய சுற்று) ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் காலிறுதியில் கின்வென் ஜெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்